உம்மைத்தான் பாடுவேன்
உயிர்த்த தெய்வமே
உமக்காய் ஓடுவேன்
உயிருள்ள நாளெல்லாம்
ஆராதனை ஆராதனை
தகப்பனே உமக்குத்தான்
1.
உமது சித்தத்தால் உலகமே வந்தது
உமது இரத்தத்தால் விலைக்கொடுத்து மீட்டீர் – உம்மை
2.
நீரே சிருஷ்டித்தீர், காண்கின்ற அனைத்தையும்
நீரே படைத்தீர், வானம் பூமி அனைத்தும் – உம்மை
3.
கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார் ?
உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார் ? – உம்மை
4.
ஜனங்கள் யாவரும், வணங்குவார் உம்மையே
தேசம் அனைத்தும், இயேசு நாமம் சொல்லும் – உம்மை
5.
வல்லவர், சர்வ வல்லவர், ஆளுகை செய்கின்றீர்
மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன் – உம்மை
6.
உலகின் நாடுகள், உமக்கே உரியன
நீரே என்றென்றும் ஆளுகை செய்கின்றீர் – உம்மை
7.
பெலனும், ஞனமும் உமக்கே உரியன
மாட்சிமை, வல்லமை, உமக்குத்தானே சொந்தம் – உம்மை